இன்று அப்பகுதி யில் பணி புரியும் தோட்ட தொழிலாளர்கள் வால்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற துடிக்கும் டேன் டீ நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
தொழிலாளர்கள் அதிர்ச்சி
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சிங்கோனா பகுதியில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டேன் டீ தேயிலை தோட்டம் மற்றும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தோட்ட தொழிலாளர்கள் குடும்பங்களாக இங்கு தங்கி எஸ்டேட் பணி புரிந்து வருகின்றனர். தற்போது மேற்படி எஸ்டேட் நிர்வாகம் இப்பகுதியில் 40 ஆண்டுகளாக பணி புரியும் தொழிலார்களை தாமாக முன்வந்து பணியிலிருந்து விடுவித்து கொள்ளவும், 40 ஆண்டுகளுக்கு குறைவாக பணி புரிப்பவர்கள் ஊட்டியில் உள்ள குன்னூர் பகுதிக்கு சென்று பணியாற்ற லாம் என்றும் வாய் மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினரிடம் மனு
மேலும் நிர்வாகத்திடம் பேசியும் வந்த நிலையில், இன்று அப்பகுதி யில் பணி புரியும் தோட்ட தொழிலாளர்கள் வால்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அப்போது தொழிலார்கள் கூறுகையில் நாங்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் பணி புரிந்து வருகிறோம். தற்போது எஸ்டேட் நிர்வாகம் எங்களை திடீரென வேலையை விட்டு போக சொல்கிறார்கள்.
எங்களுக்கு நிர்வாகம் சர்வீஸ் பணம் 20 லட்சம் கொடுக்கும் பட்சத்தில் நாங்கள் இப்பகுதியிலிருந்து செல்கிறோம் அதற்கு நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து அமுல் கந்தசாமி தெரிவிக்கயில் டேன் டீ நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்த படும் என்று உறுதி அளித்தார். இச்ம்பவம் அப்பகுதி தோட்ட தொழிலாளர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.