வேளாண் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான, 2021 பிப்ரவரி மாதத்திய அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (அடிப்படை:1986-87=100), தலா ஒரு புள்ளி குறைந்து முறையே 1037 மற்றும் 1044 புள்ளிகளாக உள்ளது.
இந்தக் குறியீட்டெண்ணின் ஏற்ற இறக்கங்கள், மாநிலங்கள் தோறும் மாறுபடுகின்றன. தமிழ்நாடு, வேளாண் தொழிலாளர்களுக்கான குறியீட்டெண்ணில் 1252 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இமாச்சலப் பிரதேசம் 818 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
கிராமப்புற தொழிலாளர்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு 1237 புள்ளிகளுடன் குறியீட்டெண் பட்டியலில் முதலிடத்திலும், பிகார் 842 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
சமீபத்திய குறியீடுகள் குறித்து பேசிய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) சந்தோஷ் கங்க்வார், “குறைந்துள்ள கோதுமை மற்றும் காய்கறி விலைகளின் காரணமாக வேளாண் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான, 2021 பிப்ரவரி மாதத்திய அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் குறைந்துள்ளது.
ஊரக பகுதிகளில் உள்ள பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் சுமையை இது குறைக்கும் என்பதால், அவர்களுக்கு இது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்,” என்றார்.
வேளாண் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான, 2021 பிப்ரவரி மாதத்திய அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை வெளியிட்ட தொழிலாளர் அலுவலகத்தின் தலைமை இயக்குநர் டி பி எஸ் நெகி, “கோதுமை, மாவு, சர்க்கரை, உருளை மற்றும் காளிஃபிளவர் ஆகியவற்றின் விலை குறைந்துள்ளதன் காரணமாக, வேளாண் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான, 2021 பிப்ரவரி மாதத்திய அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (அடிப்படை: 1986-87=100), தலா ஒரு புள்ளி குறைந்து முறையே 1037 மற்றும் 1044 புள்ளிகளாக உள்ளது.” என்று கூறினார்