சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்நாட்டில் கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொத்தடிமை தொழிலாளர்களை பயன்படுத்துவது கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தின்படி தடைசெய்யப்பட்ட குற்றமாகும். இதுபோன்ற தொழிலாளர்களை மீட்டு, மறுவாழ்வு அளித்திட மாவட்ட அளவில் கொத்தடிமை கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது.
கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்கள் தொடர்பான விவரங்களை புகாராக அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் 1800 4252 650 ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.