வேலூர் :
குடியாத்தம் தாலுகா அலுவலகம் அருகே தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் டி.ஆனந்தன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொறுப்பாளர்கள் கே.சி.பிரேம்குமார், மகேஷ்பாபு, கல்பனாசந்தர், தங்கவேலு, வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் துரைசெல்வம் ஆர்பாட்டத்தை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நா.பரமசிவம், கே.ஜெயராமன், என்.ஜீவானந்தம், ஆர்.கவிதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டமான 100 நாள் வேலை திட்டத்தை ஆண்டுதோறும் நிதியை குறைத்து சீர்குலைத்து வரும் மத்திய அரசை கண்டித்தும். 100 நாள் வேலை என்பதை 200 நாட்களாக உயர்த்தியும் கூலியாக 600 ரூபாய் வழங்கிட வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.