தூத்துக்குடி மாநகராட்சி க்குட்பட்ட பல்வேறு பகுதி களில் நடைபெற்று வரும் புதிய சாலை அமைக்கும் பணிகள் வடிகால், குடிநீர் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மாநகராட்சி தெற்கு மண்டலம் முத்தையாபுரம் பகுதிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் முனியசாமி கோவில் தெருவில் பணிகள் நிறைவு பெற்ற புதிய தார் சாலைகள்,முத்தையாபுரம் தோப்பு தெரு பஸ் நிறுத்துமிடம், ராஜ பாண்டி நகர் மற்றும் பெரியசாமி நகர் பகுதியில் பொதுமக்கள் மட்டுமல்லாது உப்பளத் தொழிலாளர்களும் பயன்பெறும் விதமாக புதியதாக அமைய உள்ள நவீன கழிவறைக்கான இடத்தினையும் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அப்பகுதி பொதுமக்களையும் சந்தித்து அவர்களது கருத்துக்களை யும் கேட்டறிந்தார். ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர்கள் முத்துவேல், விஜயகுமார்,ராஜதுரை, சுயம்பு,பச்சிராஜ், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.