தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நலநிதி செலுத்தும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அதன் படி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ப்ரீ கே.ஜி முதல் பட்ட மேற்படிப்பு முடிய கல்வி உதவித்தொகை, எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு கல்வி ஊக்கத்தொகை, பாடநூல் உதவி தொகை, உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வு உதவித்தொகை, மாதிரி வினாத்தாள் போன்றவை வழங்கப்படும்.
மேலும் தொழில் பயிற்சி உதவித்தொகை, 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிய மாநில அளவில் விளையாட தகுதி பெறுவதற்கு விளையாட்டு உதவித்தொகை, மாநில அளவில் வெற்றி பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலிடம் முதல் 3-ம் இடம் வரை பரிசுத்தொகை வழங்குதல், தையல் எந்திரம் வாங்குவதற்கு உதவி தொகை உள்ளிட்ட தொகை வழங்கப்படுகிறது. இந்த நலத்திட்டங்களில் பயனடைய தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரியில் அனுப்பலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.