பி.எப். பணம் ரூ.37 கோடி கையாடல்; கரோனா காலத்தில் ஆன்லைன் முறைகேடு
தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகை வட்டியுடன் அளிக்கப்படுகின்றன. இதற்காக தொழிலாளர்கள் அவர்கள் பணியாற்றும் காலத்தின்போது, மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அவரது வைப்பு நிதிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
அரசு நிர்வகிக்கும் தொழிலாளர் வைப்பு நிதி
இதேபோல், குறிப்பிட்ட தொகையை தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனம் சார்பில் செலுத்தப்படுகிறது. தொழிலாளர் வைப்பு நிதியில் உள்ள பணம் அரசு சார்பில் நிர்வகிக்கப்படுகிறது. தொழிலாளர் மற்றும் நிறுவனம் செலுத்தும் தொகைக்கு அரசு சார்பில் குறிப்பிட்ட அளவு வட்டியாக பணம் செலுத்தப்படும். தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி கணக்கு தொடர்பாக 12 இலக்க எண் வழங்கப்படும். கணக்கில் எவ்வளவு நிதி சேர்ந்துள்ளது என்பதை இந்த எண்ணை பயன்படுத்தி இணையம் மூலம் அறிந்துகொள்ளலாம்.
ஈபிஎஃப் பெறுவதில் உள்ளநிபந்தனைகள்..
ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலோ அல்லது வெறு பணிக்கு மாறுதலாகி சென்றாலோ அவரது தொழிலாளர் வைப்பு நிதியில் சேகரிக்கப்பட்ட நிதியை பெற முடியும். தற்போதைய விதிகளின்படி, ஒரு நபர் ஒரு மாதத்திற்கு வேலையில்லாமல் இருந்தால் 75 சதவீதம் ஈபிஎஃப் கார்பஸை திரும்பப் பெற முடியும். வேலையின்மை இரண்டு மாதங்களுக்கு மேல் இருந்தால் மீதமுள்ள 25 சதவீதத்தை நீங்கள் திரும்பப் பெறலாம். இதேபோல், மருத்துவ செலவு, அவசர செலவு போன்றவற்றிற்காக தொழிலாளர் வைப்பு நிதியில் இருந்து குறிப்பிட்ட அளவு நிதியை பெற முடியும் என்பது கூடுதல் சிறப்பு
ஓய்வு பெறும் வயதிற்கு முன்னரே பணியாளர் உயிரிழந்துவிட்டால் அவரது மனைவி அல்லது குழந்தைகளுக்கு அவரது வைப்பு நிதியில் உள்ள பணம் வழங்கப்படும். ஒருவர் வேறு பணிக்கு மாறுதலாகி சென்றால், தனது பழைய தொழிலாளர் வைப்பு நிதி கணக்கையே புதிய நிறுவனத்திலும் தொடரக்கூடிய வசதியும் உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு என்பது கட்டாய ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும் . இது வரி இல்லாத வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பணி ஓய்வு பெற்றவர்கள் தங்களது முதுமை காலத்தில் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் பல்வேறு வளரும் நாடுகளில் இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது..