புத்தாண்டுக்கான காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் ஆடி 18 தொடக்கி தை மாதம் வரை நடைபெறும் நிலையில் தற்போது புத்தாண்டு நெருங்கிவிட்டாதால் உச்சத்தை அடைந்துள்ளது.
பட்டாசும் காலண்டரும் :
தொழில் நகரமாக விளங்கும் சிவகாசியில் பட்டாசு, அச்சுத் தொழில் இந்த இரண்டுக்கும் அடுத்தபடியாக அதிகளவில் நடைபெறும் தொழில் என்றால் அது காலண்டர் தயாரிப்பு தான். இன்று தமிழ்நாடு மட்டுமல்ல தமிழர்கள் அதிகளவில் வாழும் பகுதிகளுக்குகூட சிவகாசியில் இருந்து தான் காலண்டர் அனுப்பபட்டு வருகிறது.
அந்த அளவுக்கு சிவகாசி காலண்டர் புகழ் பெற்றது. இதற்கு காரணம் சிவகாசியில் அதிகளவு ப்ரிண்ட்டிங் ப்ரஸ் இருப்பதும் மூலப்பொருட்கள் எளிதாக கிடைப்பதும் தான்.
ஒரு காலத்தில் அமோகமாக நடைபெற்று வந்த இந்த தொழிலும் இன்று மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் சரிவை சந்தித்து வருகின்றன.பலர் காலண்டர் தொழிலை விட்டுவிட்டதாக கூறப்படும் நிலையில், காலண்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் இன்று பட்டாசு வேலைக்கு சென்று விட்டதாக கூறுகின்றனர்