பென்சன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
அதே நேரத்தில் நாங்கள் பெரிதும் எதிர்பார்த்த பென்சன் தொகை 1000 ரூபாய் என்பதை 3000 ரூபாயாக உயர்த்துவது, இயற்கை மரணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் என்பதை 2 லட்சம் ரூபாயாகவும், திருமண உதவித் தொகை ஆண், பெண் இரு பாலர்களுக்கும் 25,000 ரூபாயாகவும் உயர்த்தி அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதுபற்றிய அறிவிப்பு வரவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்ன பெண்களுக்கான உரிமைத் தொகை 1000 ரூபாய் என்பதுவரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்து பெண்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார். ஆனால் எங்களின் நியாயமான கோரிக்கைகளை சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறேம். இதற்கான கூடுதல் செலவினம் அரசுக்கு ஏற்படாது.
காரணம், கட்டிடம் கட்டுபவர்கள் மூலமாகப் பெறப்படும் “லெவி” ஒரு சதவீதம் நிதி பெறுவதின் மூலம் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில நிதி உள்ளது. அந்த நிதிதான் இதற்கு செலவிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே முதல்வர் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பென்சன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக முதல்வர்களுக்கு கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சமீபத்தில் கடிதம் அனுப்பியிருந்தது. அதில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் வாரிய அட்டை வழங்கப்படாமல் தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாகவும், தொழிலாளர்களை நேரில் அழைத்து ஆவணங்களை சரிபார்த்து வாரிய அட்டை உடனடியாக வழங்கிட வேண்டும்.