தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் ஒருங்கிணைந்த பெரியாறு வைகை 5 மாவட்ட பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்ட த்திற்கு 5 மாவட்ட பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட பொதுச் செயலாளர் ராமேந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியார் வைகை விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர், பார்வர்ட் பிளாக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வாலிப்பாறை அருகே மூலவைகை ஆற்றில் புதிய அணை கட்ட வேண்டும், இலவம் பஞ்சு கிலோ ரூ.120 ,கொட்டை முந்திரி ரூ.110 க்கும் அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வைகை ஆற்றில் வாலிப்பாறை முதல் வைகை அணை வரை 12 இடங்களில் புதிய தடுப்பணைகளை கட்டவேண்டும்.
வைகை அணையில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள மணலை 10 அடி வரை தூர்வாரி அதிகமான நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யாமல் தொடர்ந்து வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயி களுக்கு ரத்துசெய்த நகை க்கடன் ரத்தை அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டித்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரி க்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.